கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம்
- நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
- 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
பரமத்தி வேலூர்Namakkal District News,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் வேளாண் இடுபொருட்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.
பயிர் சாகுபடியை ஊக்குவிக்கவும், பயிர்களில் மகசூல் அதிகரிக்கவும் தமிழக அரசு வேளாண்மைத்துறையின் மூலம் பல்வேறு இடுபொருட்களை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சர்வதேச சிறுதானிய ஆண்டாக கொண்டாடப்பட்டு வரும் சூழலில், சிறுதானிய சாகுபடிக்கான நுண்ணூட்டங்கள் 50 சத மானியத்திலும், நிலக்கடலை பயிருக்கான நுண்ணூட்டங்கள் மற்றும் இதர பயிர்களுக்கான நுண்ணூட்டங்கள் 50 சதவீதம் மானியத்திலும் கபிலர்மலை வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன.
இது தவிர கரும்பு, நெல் மற்றும் தென்னைக்கான நுண்ணூட்டங்களும் இருப்பில் வைக்கப்பட்டு உள்ளன. பயிர்களை பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கும் இயற்கையான பயிர் பாதுகாப்பு மருந்துகளான சூடோமோனாஸ் மற்றும் விரிடி ஆகியவையும் 50 சத மானியத்தில் இருப்பில் உள்ளது.
விவசாயிகளுக்கு உரச்செலவினை குறைத்து, மண்ணிலுள்ள சத்துக்களை பயிர்கள் எளிதில் எடுத்துக்கொள்ளும் வகையில் செயல்படக்கூடிய உயிர் உரங்களான பாஸ்போபாக்டீரியா மற்றும் அசோஸ்பைரில்லம் ஆகியன 50 சதவீதம் மானியத்திலும், பயிர்களுக்கு தெளிப்பான்கள் மூலம் எளிதாக தெளிக்கும் வடிவிலான திரவ அசோஸ்பைரில்லம் ஆகியனவும் விரிவாக்க மையத்தில் விவசாயிகளுக்கு விநியோகிக்க இருப்பில் வைக்கப்பட்டு உள்ளது. மேலும் நெல், பாசிப்பயறு, உளுந்து, சோளம், சாமை, நிலக்கடலை மற்றும் எள் விதைகளும் விவசாயிகளுக்கு மானியத்தில் விநியோகம் செய்ய தயார் நிலையில் உள்ளது.
மேற்கண்ட வேளாண் இடுபொருட்கள் தேவைப்படும் விவசாயிகள் வட்டார உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டோ அல்லது கபிலர்மலை வேளாண் விரிவாக்க மையத்திற்கு நேரில் வந்து இடுபொருட்களை பெற்று பயனடையுமாறு கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி விவசாயிகளை கேட்டுக்கொண்டுள்ளார்.