நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரியில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியது
- 2022-ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் 100 இடங்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.
- 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியுள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ளது . கடந்த 2020 ம் ஆண்டு கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2021 ம் ஆண்டு பணிகள் முடிக்கப்பட்டன.
இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு முதல் மாணவ, மாணவிகள் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரியில் 100 இடங்களுக்கு எம்.பி.பி.எஸ் படிப்புக்கு மாணவர் சேர்க்கைக்கு மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது. நடப்பாண்டில் 2 கட்ட கவுன்சிலிங் மூலம் பெரும்பாலான இடங்கள் நிரம்பின. 15 சதவீத அகில இந்திய ஒதுக்கீட்டில் ஒரு இடம் மட்டுமே நிரம்பியுள்ளன.
முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ் சேர்க்கை பெற்றுள்ள மாணவ -மாணவிகளுக்கு வகுப்புகள் தொடக்க விழா நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. அப்போது மாணவ, மாணவிகளை வரவேற்ற பேராசிரியர்கள் அறிவுரையும் ஆலோசனையும் வழங்கினர்.
இது குறித்து பேராசிரியர்கள் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரியில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஒரு மாணவர் மட்டுமே சேர்ந்துள்ளார். 14 இடங்கள் காலியாக உள்ளன. மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு வழக்கமாக நடத்தப்படும் 2 கட்ட கவுன்சிலிங்கிற்கு பதிலாக, ஆண்டுக்கு 4 கட்ட கவுன்சிலிங் நடத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் தெரிவித்துள்ளது. இதனால் கவுன்சிலிங் முழுவதும் நிறைவடைந்தும் மீதமுள்ள இடங்கள் நிரம்ப கூடும் என தெரிகிறது என்றனர்.