உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் அகவிலைப்படி வழங்கக்கோரி மின்வாரிய ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Published On 2022-09-27 10:25 GMT   |   Update On 2022-09-27 10:25 GMT
  • மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
  • துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

நாமக்கல்:

தமிழ்நாடு மின்சார வாரியத்தில், இதுவரை மின்வாரிய பொறியாளா்கள், அலுவலா்கள், பணியாளா்கள் இடமாறுதலை வாரிய அதிகாரிகளே மேற்கொண்டு வந்தனா். இந்த நடவடிக்கை தற்போது அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மின்வாரியத்தினருக்கான பல்வேறு கடன் சலுகைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. துணை மின்நிலையங்கள் மற்றும் மின்வாரியப் பணிகளில் சிலவற்றை தனியாருக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. அகவிலைப்படி உயா்வு வழங்கடாத நிலை உள்ளது.

இவ்வாறான நடவடிக்கைகளுக்கு எதிா்ப்பு தெரிவித்தும், மின் ஊழியா்களுக்கு எதிரான அரசாணைகளை திரும்பப் பெற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் நேற்று காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. நாமக்கல் மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்தில், நாமக்கல் மின்பகிா்மான வட்ட மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் உயா்மட்ட நிா்வாகிகள் கே.ஆனந்த்பாபு, டி.எஸ்.கந்தசாமி, கோவிந்தராஜ், முத்துசாமி, சிட்டுசாமி, முருகானந்தம் உள்ளிட்டோா் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். மின்வாரிய ஊழியா்கள் ஏராளமானோா் கலந்து கொண்டு பல்வேறு முழக்கங்களை எழுப்பினா்.

Tags:    

Similar News