உருண்டை வெல்லம் சிப்பம் ரூ.1,270 ஆக விலை குறைந்தது
- கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
- ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது.
பரமத்திவேலூர்
பரமத்திவேலூர் வட்டாரத்தில் அண்ணா நகர், சேளூர், சாணார்பாளையம், பிலிக்கல்பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், குறும்பல மகாதேவி, கொத்தமங்கலம், ஜமீன் இளம்பள்ளி, சோழ சிராமணி ஜேடர்பா ளையம், கோப்பணம்பா ளையம், கபிலர்மலை, பரமத்திவேலூர், பாண்டமங்கலம், நன்செய் இடையாறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான ஏக்கரில் கரும்பு பயிர் செய்யப்பட்டுள்ளது. கரும்புகள் விளைந்தவுடன் வெட்டிச் செல்வதற்காக மோகனூரில் உள்ள சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்யாத விவசாயிகள் இப்பகுதிகளில் விளையும் கரும்புகளை கரும்பு ஆலை உரிமையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். வாங்கிய கரும்புகளை சாறு பிழிந்து கொப்பரையில் ஊற்றி பாகு ஆக்கி உருண்டை வெல்லம், அச்சு வெல்லம் மற்றும் நாட்டுச் சர்க்கரை ஆகியவற்றை தயார் செய்கின்றனர்.
பின்னர் அவற்றை 30 கிலோ கொண்ட சிப்பங்களாக (மூட்டைகளாக) கட்டி, உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பிலிக்கல்பாளையத்தில் உள்ள வெல்ல ஏல சந்தைக்கும் கொண்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வாரமும் சனி மற்றும் புதன்கிழமைகளில் வெல்ல ஏலச் சந்தையில் ஏலம் நடைபெறுகிறது.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் 30 கிலோ கொண்ட உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும், அச்சு வெல்லம் சிலம்பம் ஒன்று ரூ.1,340 வரையிலும் ஏலம் போனது.
நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு 4 ஆயிரத்து 100 உருண்டை வெல்ல சிப்பங்களும், 2 ஆயிரம் அச்சு வெல்ல சிப்பங்களும் கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் உருண்டை வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும், அச்சு வெல்லம் சிப்பம் ஒன்று ரூ.1,270 வரையிலும் ஏலம் போனது. கடந்த வாரத்தை விட நேற்றைய ஏலத்தில் வெல்லம் விலை சற்று வீழ்ச்சி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.