உள்ளூர் செய்திகள்

ஆத்தூர் சோமநாத சுவாமி கோவிலில் நடராஜர் அபிஷேகம்

Published On 2023-09-29 08:50 GMT   |   Update On 2023-09-29 08:50 GMT
  • நடராஜருக்கு ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.
  • அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது.

 ஆத்தூர்:

ஆத்தூர் ஸ்ரீசோமநாத சுவாமி சமேத ஸ்ரீசோமசுந்தரி அம்பாள் கோவிலில் நடராஜர் அபிஷேகம் நடைபெற்றது. சைவ சமய ஆகமங்களின் படி நடராஜருக்கு சித்திரை திருவோணம், ஆனி உத்திரம், மார்கழி திருவாதிரை, ஆவணி வளர்பிறை சதுர்த்தசி, புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி மற்றும் மாசி வளர்பிறை சதுர்த்தசி என ஆண்டு ஒன்றிற்கு ஆறு முறை அபிஷேகங்கள் நடைபெறும்.

புரட்டாசி வளர்பிறை சதுர்த்தசி தினமான நேற்று ஶ்ரீ சோமநாத சுவாமி சமேத ஶ்ரீ சோமசுந்தரி அம்பாள் கோவில் நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக காலை யாகசாலை பூஜை நடைபெற்றது, நடராஜர், சிவகாமசுந்தரி அம்பாள் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றதை தொடர்ந்து தாண்டவ தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மண்டகப்படி தாரர் விஜயலெட்சுமி நயினார்குல சேகரன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News