நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் தேசிய நுகர்வோர் உரிமை தினவிழா போட்டிகள்
- நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
- இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
நெல்லை:
நெல்லை மாவட்ட உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் நெல்லை அரசு அருங்காட்சியகம் இணைந்து தேசிய நுகர்வோர் உரிமை தின விழிப்புணர்வு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடைபெற்றது.
விழிப்புணர்வு போட்டிகள்
இதில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டியும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை போட்டியும், கல்லூரி மாணவ-மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி ஆகிய விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு அருங் காட்சியக காப்பாட்சியர் சிவ சத்தியவள்ளி தலைமை தாங்கினார்.
தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவை மாநில தலைவர் வக்கீல் ஜாபர் அலி போட்டிகளை தொடங்கி வைத்தார். கவிஞர் கணபதி சுப்ரமணியன் சிறப்புரையாற்றினார்.
போட்டி நடுவர்களாக கவிஞர் சுப்பையா, ம.தி.தா. இந்து கல்லூரி கலை ஆசிரியை சொர்ணம் ஆகியோர் செயல்பட்டனர். ஓய்வு பெற்ற துணை கலெக்டர் தியாகராஜன் வாழ்த்துரை வழங்கினார்.
வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளை மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நாளை(திங்கட்கிழமை) மாலை கலெக்டர் விஷ்ணு வழங்குகிறார்.
ஏற்பாடுகளை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அலுவலர் வள்ளிக்கண், தாசில்தார் கனகராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.