உள்ளூர் செய்திகள்

 பேளூரில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம்.

பேளூரில் தேசிய குடற்புழு நீக்க தின விழிப்புணர்வு முகாம்

Published On 2023-08-18 10:32 GMT   |   Update On 2023-08-18 10:32 GMT
  • அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.
  • பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி வட்டாரத்தில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தினம் கடைபிடிக்கப்பட்டது.

பேளூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற தேசிய குடற்புழு நீக்க விழிப்புணர்வு தின நிகழ்ச்சியை ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி தொடங்கி வைத்தார்.

1 முதல் 19 வயது வரை உள்ள குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு குடற்புழு நீக்க (அல்பென்டசோல்) மாத்திரைகள் வழங்கப்பட்டது. 20 வயது முதல் 30 வயதுடை யோருக்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களில் குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டன.

வட்டார மருத்துவ அலுவலர் பொன்னம்பலம், மருத்துவ அலுவலர் அபிராமி மற்றும் நர்சுகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் ஆத்தூர் சுகாதார மாவட்ட துணை இயக்குனர் ஜெமினி பேசுகையில், குடற்புழுவால் ஏற்படும் உபாதைகள், ரத்த சோகை பாதிப்பு, பேறு கால சிக்கல்கள் மற்றும் கையாளும் வழிமுறைகள் குறித்தும், குடற்புழு நீக்கத்தால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கினார்.

இதில் டாக்டர்கள், மருத்துவ பணியாளர்கள், நர்சுகள், பொதுமக்கள் அனைவரும், சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். முடிவில் வட்டார புள்ளியியலாளர் அவினாசிலிங்கம் நன்றி கூறினார்.

Tags:    

Similar News