தென்திருப்பேரையில் தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
- தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவடி பண்ணை அரசு பள்ளியில் நடைபெற்றது.
- விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர்.
தென்திருப்பேரை:
சமூக பாதுகாப்புத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான தேசிய பெண்குழந்தைகள் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி தென்திருப்பேரை பேரூராட்சி மாவடி பண்ணை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
ஆசிரியர் கிங்ஸ்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் விஜி முன்னிலை வகித்தார். தென்திருப்பேரை பேரூராட்சி தலைவர் மணிமேகலை ஆனந்த் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நலக்குழு உறுப்பினர் சித்தி ரம்ஜான், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் பிரதிநிதி அனிற்றா ரூத் மங்களசெல்வி, ஆழ்வார் திருநகரி காவல் நிலைய சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள் ஆகியோர் பெண்குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சம்பந்தமாக பள்ளி மாணவிகளுக்கு சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் ரமேசுபாபு, பேரூராட்சி உறுப்பினர்கள் ஆனந்த், சண்முகசுந்தரம், கொடி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். ஏராளமான பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியை சுனந்தா நன்றி கூறினார்.