உள்ளூர் செய்திகள்

ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா

Published On 2023-09-26 08:57 GMT   |   Update On 2023-09-26 08:57 GMT
  • சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
  • கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.

வள்ளியூர்:

நெல்லை மாவட்டம் சமூகரெங்கபுரத்தில் உள்ள ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட நாள் விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக சமூகரெங்கபுரம் ஊராட்சி மன்ற தலைவர் அந்தோணி அருள் கலந்து கொண்டு பொது சேவையில் மாணவர்கள் பங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். விழாவை கல்லூரியின் தலைவர் டி.டி.என். லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய கல்லூரியின் முதல்வர் சுரேஷ் தங்கராஜ் தாம்சன் மாணவர்களுக்கு தூய்மையான உலகை உருவாக்குவதற்கான ஆலோசனைகளை வழங்கினார். கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி முகமது இபாம் 2022-23 -ம் கல்வி ஆண்டிற்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். 2-ம் ஆண்டு எலக்ட்ரானிக்ஸ் துறை மாணவர் தருண் ஆண்டனி வரவேற்று பேசினார். முதலாம் ஆண்டு மாணவர் குணசீலன் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாட்டினை கல்லூரியின் நாட்டு நல பணித்திட்ட அதிகாரி செய்திருந்தார்.

Tags:    

Similar News