உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட காட்சி.

பாளை சாரதா கல்லூரியில் தேசிய இளைஞர் தின கொண்டாட்டம்

Published On 2023-01-13 09:27 GMT   |   Update On 2023-01-13 09:27 GMT
  • தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
  • கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தினை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

நெல்லை:

பாளை சாரதா கல்லூரியில் தேசிய இளைஞர் தினம் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் அனுஷா வரவேற்று பேசினார்.

போட்டிகள்

கல்வியியல் கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்ரியா அம்பா விவேகானந்தரின் பிறந்தநாளை தேசிய இளைஞர் தினமாக கொண்டாடுவதன் காரணம் குறித்து விளக்கி பேசினார்.

சிறப்பு விருந்தினராக திண்டுக்கல் மாவட்ட காந்தி கிராம் கிராமப்புற நிறுவனத்தின் சமூகவியல் துறை பேராசிரியர் ரூபா ஹரி கலந்து கொண்டு பேசினார். முன்னதாக கல்லூரி முதல்வர் கமலா சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து பேசினார்.

விழாவில் கல்லூரி மாணவிகள் பூரணி, சந்தியா, ஷாலினி ஆகியோர் உரையாற்றினர். மேலும் தேசிய இளைஞர் தினத்தையொட்டி நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவி களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் கல்லூரி கல்வி இயக்குநர் சந்திரசேகரன், கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாணவி சுபஜோதி நன்றி கூறினார்.

விளையாட்டு விழா

இதேபோல் கல்லூரியில் நடைபெற்ற 37- வது விளையாட்டு விழாவில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி புலத்தலைவர் தேரடிமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஒலிம்பிக் தீபத்தி னை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் சாரதா கல்லூரி செயலர் யதீஸ்வரி துர்காப்பிரியா, கல்லூரி இயக்குநர் சந்திரசேகர் கிள்ளிகுளம் வேளாண் ஆராய்சி நிறுவனத்தை சேர்ந்த ஜூலியட் ஹெப்சிபா மற்றும் செந்தில்குமார், ஆகியோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் கமலா வரவேற்றார்.

உடற்கல்வியியல் துறை பேரா சிரியர் வெயிலு முத்து ஆண்டறிக்கை வாசித்தார். நிகழ்ச்சியில் மாணவிகளின் விழிப்பு ணர்வு அணிவகுப்புகள் மற்றும் நாடகங்கள், கலை நிகழ்ச்சிககள், நடை பெற்றது. தொடர்ந்து பார்வையாளர்களுக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முடிவில் மாணவி நன்றி கூறினார்.

Tags:    

Similar News