தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இயற்கை மருத்துவம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
- விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார்.
- மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் குறித்து எடுத்துக்கூறினார்.
வள்ளியூர்:
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் இளம் செஞ்சிலுவை சங்கம் சார்பில் ஆரோக்கிய வாழ்விற்கான இயற்கை மருத்துவமும், அணுகுமுறைகளும் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கினார். இளம் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா வரவேற்றார். இயற்பியல் துறை தலைவர் பாலமுருகன் மற்றும் ஐ.கியூ.ஏ.சி. ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
சிறப்பு விருந்தினராக தெற்கு கள்ளிகுளம் பனிமாதா இயற்கை மருத்துவமனையின் மருத்துவர் ஜென்சி ஷைலா இயற்கை மருத்துவத்தின் முக்கியத்துவம் மற்றும் அதன் சிறப்புகள் குறித்து எடுத்துக்கூறினார். முடிவில், இளம் செஞ்சிலுவைச் சங்கம் ஒருங்கிணைப்பாளர் கிரிஜா நன்றி கூறினார். இதில் அலுவலக கண்காணிப்பாளர் பாலச்சந்திரன், பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.