உள்ளூர் செய்திகள்

நாமக்கல் அருகே2 மாதங்களாக குடிநீர் விநியோகம் நிறுத்தம்

Published On 2023-04-20 09:24 GMT   |   Update On 2023-04-20 09:24 GMT
  • காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
  • கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

நாமக்கல்:

நாமக்கல் அருகே ஓலப்பாளையம் ஊராட்சி காமாட்சி நகர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த கிராமத்திற்கு ஊராட்சி மூலம் காவிரி குடிநீர் மற்றும் ஆழ்துளை கிணற்றுநீர் விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் வழங்கப்படவில்லை என்பதால் அந்த பகுதி மக்கள் தவிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறுகையில், கடந்த 2 மாதங்களாக காவிரி குடிநீர் சரிவர விநியோகிக்கப்படவில்லை. ஆழ்துளை கிணறு தண்ணீரும் சரியாக வருவதில்லை. அதனால் தண்ணீரை விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. எனவே குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

Similar News