பாண்டமங்கலம் அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது 1500 கிலோ ரேஷன் அரிசி-சரக்கு ஆட்டோ பறிமுதல்
- சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.
- ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பாண்டமங்கலம் அருகே உள்ள வெங்கரை பேருந்து நிறுத்தம் அருகே நாமக்கல் மாவட்ட குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை சப்-இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை யில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோ ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில் சரக்கு ஆட்டோவில் 50 கிலோ கொண்ட 30 மூட்டைகளில் வைக்கப்பட்டிருந்த 1500 கிலோ ரேசன் அரிசி இருந்தது தெரியவந்தது.அதனையடுத்து சரக்கு ஆட்டோவில் ரேசன் அரி சியை கடத்தி வந்த மோகனூர் தாலுகா, கீழ்பாலபட்டியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் ரஞ்சித்குமார் (வயது 21), அதே பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் (42) ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மேலும், 1500 கிலோ ரேஷன் அரிசி மற்றும் ஆட்டோவை பறிமுதல் செய்து குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.