திட்டக்குடி அருகே சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்த தனியார் பள்ளி பஸ்
- திட்டக்குடி அருகே சாலை ஓர பள்ளத்தில் தனியார் பள்ளி பஸ் கவிழ்ந்தது.
- 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம்.
கடலூர்:
திட்டக்குடி அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பள்ளி பேருந்து சாலையோர பள்ளத்தில் கலந்து விபத்து அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் மாணவ மாணவிகள் உயிர் தப்பினர்.கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஐவனூர் ,ஆலம்பாடி சாலையில் கழுதூரில் இயங்கி வரும் தனியார் பள்ளி பஸ் நெடுங்குளம், சிறுமுளை, பெருமுளை, புலிவலம், ஐயவனூர், ஆலம்பாடி, ஆவட்டி ஆகிய பகுதிகளில் உள்ள 12 மற்றும் 10 -ம் வகுப்பு பயிலும் 22 மாணவ, மாணவிகளை தினந்தோறும் ஏற்றி செல்வது வழக்கம். இன்று காலை வழக்கம்போல் பெருமுளை கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றி கொண்டு பஸ் ஓட்டி வந்தார். கனகம்பாடி கிராமம் அருகே பஸ் அதிவேகமாக சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர விவசாய நிலத்தில் கவிழ்ந்து விபத்தானது. இதனால் மாணவ- மாணவிகள் அலறினர். சத்தம் கேட்டு பொது மக்கள் ஓடிவந்தனர். விபத்தில் சிக்கிய மாணவ மாணவிகளை மீட்டனர். இந்த விபத்தல் சிறு காயங்களுடன் அதிஷ்டவசமாக அனைவரும் உயிர் தப்பினர் . தகவலறிந்து வந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை மீட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றனர் .இது குறித்து ராமநத்தம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.