உள்ளூர் செய்திகள்

அம்மன் கோவிலில் கண்டெடுக்கப்பட்ட சாமி சிலையை படத்தில் காணலாம்.

திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுப்பு

Published On 2022-07-14 07:39 GMT   |   Update On 2022-07-14 07:39 GMT
  • திட்டக்குடி அருகே அம்மன் கோவிலில் சாமி சிலை கண்டெடுக்கப்பட்டது.
  • கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள போத்திரமங்கலம் கிராமத்தில் உள்ள 600 ஆண்டு பழமை வாய்ந்த ஸ்ரீ ஆராமுது அம்பாள் சமேத ஸ்ரீ திருக்காமேஸ்வரர் கோவில் உள்ளது. கிராமத்தில் இந்த கோவிலை புரணமைப்பு செய்ய வேண்டும் என கடந்த 2007 - 2008 ஆம் ஆண்டு முதல் ஆலய திருப்பணிகள் தொடங்கியது. மீண்டும் ஊர் பொதுமக்கள் கூடி வீட்டிற்கு வீடு வரி வசூல் செய்து கோவிலின் திருப்பணியானது கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஆலயத்தின் முன்பு புதிதாக மண்டபம் அமைப்பதற்காக நேற்று காலை பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து மாலை கோயிலின் முன்பு மண்டபம் கட்டுவதற்காக ஜேசிபி இயந்திரம் மூலம் 4 பள்ளங்கள் தோண்டப்பட்டது.

அப்போது கோயிலின் வலது பக்கத்தில் முதல் பள்ளத்தில் ஒரு அடி உயரத்தில் அமர்ந்த நிலையில் அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்டது. இந்த தகவல் கிராமம் முழுவதும் வேகமாக பரவியது. இதனால் பொதுமக்கள் அம்மன் சிலையை பார்ப்பதற்கும், சாமி தரிசனம் செய்வதற்கும் குவிந்தனர். அம்மன் சிலை கோவில் கருவிழி வைத்து பூஜை செய்யப்பட்டு வருகிறது. இதுகுறித்து திட்டக்குடி தாசில்தாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அதன் மூலம் கண்டெடுக்கப்பட்ட அம்மன் சிலை ஐம்பொன்அல்லது வேறு ஏதும் உலோகத்தால் ஆனதா என ஆய்வு செய்து வருகின்றனர். கோயிலில் மண்டபம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் அம்மன் சிலை கண்டெடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News