உள்ளூர் செய்திகள்

பொள்ளாச்சி அருகே ஆழியார்-வால்பாறை சாலையில் கரடி நடமாட்டம்

Published On 2022-08-03 09:33 GMT   |   Update On 2022-08-03 09:33 GMT
  • சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
  • சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

ஆனைமலை:

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள பொள்ளாச்சி, வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி வனசரகங்களில் யானை, புலி, கரடி சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

இந்த வனவிலங்குகள் ஆழியாறில் இருந்து வால்பாறை செல்லும் சாலையில் கடந்து செல்வது வழக்கம். குறிப்பாக வில்லோனி, வேவர்லி, தோணிமுடி, நடுமலை, கவர்க்கல், அக்காமலை உள்ளிட்ட எஸ்டேட்களில் கரடிகள் நடமாட்டம் உள்ளது.

இந்த நிலையில் ஆழியாறு-வால்பாறை சாலையில் காண்டூர் கால்வாய் கடக்கும் பகுதியில் கரடி ஒன்று சாலையோரத்தில் நடமாடும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

ஆழியாறு அருகே வால்பாறை சாலையில் கரடி ஒன்று சுற்றி திரிவதை சுற்றுலா பயணிகள் வீடியோ எடுத்துள்ளனர்.

வால்பாறை செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியில் வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்வது, புகைப்படம் எடுப்பது, அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைவது, வனவிலங்குகளை அதன் அருகில் சென்று புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது.

வனவிலங்குகளால் சுற்றுலா பயணிகளுக்கு ஆபத்து ஏற்படுவதை தடுக்கவும், சுற்றுலா பயணிகளால் வனவிலங்குகளுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கவும் வனப்பகுதிக்குள் செல்லும் சுற்றுலா பயணிகள் வனச்சட்டங்களையும், விதிகளையும் மதித்து நடக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். 

Tags:    

Similar News