உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே குவாரிகளால், குடியிருப்பு பகுதிகளுக்கு பாதிப்பு -பொதுமக்கள், கலெக்டர் அலுவலகத்தில் மனு

Published On 2022-09-06 08:32 GMT   |   Update On 2022-09-06 08:32 GMT
  • வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
  • விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது.

கிருஷ்ணகிரி,

சூளகிரி அருகே உள்ள மாசிநாயக்கனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சுமார் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

எங்கள் கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தின் அருகே உரிய அனுமதியின்றி கல்குவாரி மற்றும் கிரசர் தொழிற்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த குவாரிகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெடி மருத்துக்களை பயன்படுத்தி பாறைகள் வெடிகள் வைத்து உடைக்கப்படுகிறது. இதனால் எங்கள் வீடுகளில் அதிர்வு ஏற்பட்டு, குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், கிராம சாலையை விவசாயிகள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது கிரானைட் கற்கள் மற்றும் எம்.சாண்ட் மணல் ஆகியவை ராட்சத டிப்பர் லாரிகளில் எடுத்து செல்லப்படுவதால் விவசாயமும் செய்ய முடியவில்லை, ஆடுமாடுகளும் மேய்க்க முடியாத நிலை ஏற்படுகிறது, சில நேரங்களில் வேகமாக செல்லும் டிப்பர் லாரிகளால் விபத்துக்கள் ஏற்படுகிறது.

இது குறித்து கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, சட்ட விரோதமாக இயங்கும் கல்குவாரிகளால் ஏற்படும் விபத்தினை தடுத்து நிறுத்திடவும், கொலை மிரட்டல் விடுக்கும் குவாரி உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News