உள்ளூர் செய்திகள்

செல்போன்களை திருடிய வழக்கில் கைதான இருவரையும் படத்தில் காணலாம்.

வேப்பனப்பள்ளி அருகே இரவு நேரத்தில் செல்போன் திருட்டில் ஈடுபட்ட 2 வாலிபர்கள் கைது

Published On 2022-08-21 08:47 GMT   |   Update On 2022-08-21 08:47 GMT
  • இரவு நேரங்களில் இப்பகுதியில் நிற்கும் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
  • நெடுஞ்சாலையில் லாரி டிரைவர்களை குறி வைத்து திருடினர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே உள்ள குருபரப்பள்ளியில் சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் லாரி ஓட்டுனர்கள் மற்றும் இரு சக்கர வாகன ஓட்டிகளிடம் அடிக்கடி செல்போன் மற்றும் பணம் திருட்டு நடப்பதாக போலீசாருக்கு தொடர் புகார் வந்தது.

இதையடுத்து குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசாரும் தேசிய நெடுஞ்சாலையில் இரவில் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த பகுதியில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமாக லாரிகள் நிறுத்துமிடத்தில் சுற்றிக்கொண்டிருந்த 2 வாலிபர்களை அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்த இரண்டு பேரையும் போலீசார் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கம்பம்பள்ளி கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் (வயது20), அதே கிராமத்தை சேர்ந்த பிரசாந்த் (21), ஆகியோர் இரவு நேரங்களில் இப்பகுதியில் நிற்கும் லாரிகள் மற்றும் இரு சக்கர வாகனங்களில் செல்போன், பணம் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவரிடம் இருந்து செல்போன்களை பறிமுதல் செய்த போலீசார் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இப்பகுதியில் தொடர் செல்போன் திருட்டில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தது இப்பகுதியில் பொதுமக்களிடையே பெரும் நிம்மதி அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News