நெல்லை வண்ணார்பேட்டை எப்.எக்ஸ். பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
- நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ்.பொறியியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கொண்டாடப்பட்டது.
- கேரளா பாரம்பரிய உடை அணிந்து, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலம் வரைந்திருந்தனர்.
நெல்லை:
நெல்லை வண்ணார் பேட்டை எப்.எக்ஸ்.பொறி யியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா கொண்டா டப்பட்டது. இதற்காக கேரளா பாரம்பரிய உடை அணிந்து, வண்ண பூக்களால் அத்தப் பூக்கோலம் வரைந்திருந்தனர்.
செல்வவளம் பெருகுவ தற்காக நெல்மணிகள் நிரம்பிய பானையில் தென்னங்குருத்தை நட்டி வைத்திருந்தனர். நிகழ்ச்சியை கல்லூரி நிறுவனர் கிளிட்டஸ் பாபு குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவர்கள் ஓணம் பண்டிகை பாடல் களை பாடினர்.
நிகழ்ச்சியில் நிறுவனர் கிளிட்டஸ் பாபு பேசுகையில், 'கேரளாவில் அனைத்தரப்பு மக்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். நமது கல்லூரியில் மாணவர்கள் ஓணம் கொண்டாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது. மாணவர்களுக்கு கடவுளின் ஆசி பூரணமாக கிடைப்பதற்கு தனது ஓணம் பண்டிகை வாழ்த்துகளை தெரிவிக்கிறேன் என்றார். இதனைத் தொடர்ந்து அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் ஸ்காட் பள்ளிகளின் தாளாளர் பிரியதர்ஷினி அருண்பாபு, பொதுமேலாளர்கள் ஜெயக்குமார், கிருஷ்ண குமார், கல்லூரி முதல்வர் வேல்முருகன், வேலை வாய்ப்புத்துறை டீன் ஞான சரவணன், பயிற்சித் துறை டீன் பாலாஜி, வளாக மேலாளர் சகாரியா காபிரியல் மற்றும் பேராசிரி யர்கள், ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.