உள்ளூர் செய்திகள்

நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. அருகில் துணைத் தலைவர் கிரிஜா திருமாறன், கமிஷனர் பார்த்தசாரதி, துப்புரவு அலுவலர் சக்திவேல் உள்ளனர்.

நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் நகரமன்ற தலைவர் பேச்சு

Published On 2022-07-01 09:40 GMT   |   Update On 2022-07-01 09:40 GMT
  • நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலை அமைக்கப்படும் என்று நகரமன்ற தலைவர் கூறினார்.
  • டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

கடலூர்:

கடலூர் அருகே உள்ள நெல்லிக்குப்பம் நகர மன்ற கூட்டம் அதன் தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது . நகர மன்ற துணைத் தலைவர் கிரிஜா திருமாறன் , நகராட்சி கமிஷனர் பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர் . கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் , நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி வெண்கல உருவ சிலை சொந்த செலவில் அமைப்பதற்கு அரசு அனுமதிகோரி தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார் . கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு:-

ஆனந்தராஜ் ( சுயே ):-நெல்லிக்குப்பம் பஸ் நிலையத்தில் கருணாநிதிக்கு வெண்கல சிலையுடன் , டாக்டர் அம்பேத்கர் சிலையும் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். பன்னீர்செல்வம் (1 -வது வார்டு) விஸ்வநாதபுரம் பகுதியில் கடந்த சில நாட்களாக கலங்கலான குடிநீர் வருவதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகிறார்கள். தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன்:- இது சம்பந்தமாக உடனடியாக அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை எடுப்பார்கள் என உறுதியளித்தார் . இக்பால் ( ம.ம.க ):- எங்கள் 8 - வது வார்டில் உள்ள நகராட்சி பள்ளி வளாகத்தில் சத்துணவு மையம் , கழிப்பறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் . முத்தமிழன் ( தி.மு.க ):- ஜம்புலிங்கம் பூங்காவில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குடிநீர் எங்கள் சரவண புரம் பகுதியில் வருவதற்கு சிரமமாக உள்ளதால் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுகிறது . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் .

சத்யா ( சுயே ):- ராமு வீதியில் சாலை பணி தொடங்கி முடிக்கப்படாமல் உள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர் . இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். புனிதவதி ( அ.தி.மு.க ):- நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 9 , 10 , 11 ஆகிய வார்டுகளில் பணிகள் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். பாருக் உசேன் ( சுயே ) - நெல்லிக்குப்பம் நகராட்சியில் துப்புரவு பணிக்கு கூடுதலாக ஆட்களை நியமித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மலையான் ( அ.தி.மு.க ) எங்களது 12 - வது வார்டில் சமுதாய கழிப்பறை சீர்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல கவுன்சிலர்கள் தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர் . இதில் நகராட்சி துப்புரவு அலுவலர் சக்திவேல் , பொறியாளர் பாண்டு , இளநிலை உதவியாளர் பாபு மற்றும் கவுன்சிலர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர் . முன்னதாக நகராட்சி மேலாளர் அண்ணாதுரை , துப்புரவு பணி மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் ஓய்வு பெற்ற நிலையில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் தலைமையில் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர் .

Tags:    

Similar News