தென்காசியில் ரூ.50 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மைய கட்டிடங்கள் திறப்பு
- தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
- நிகழ்ச்சியில் கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
தென்காசி:
தென்காசி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிரதான் மந்திரி ஜன்விகாஸ் காரியகிராம் திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள வாலிபன்பொத்தை, டி.என்.எச்.பி காலனி, மேலமுத்தாரம்மன் கோவில் தெரு, களக்கோடித் தெரு, பாறையடி தெரு உள்ளிட்ட பகுதிகளில் 5 அங்கன்வாடி மைய கட்டிடங்கள் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
கலெக்டர் திறந்து வைத்தார்
இதில் மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் கலந்து கொண்டு கட்டிடங்களை திறந்து வைத்து குத்துவிளக்கேற்றி குழந்தைகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் தென்காசி நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, நகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், மாவட்ட திட்ட அலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) ஜோஸ்பின் சகாய பிரமிளா, உதவி செயற் பொறியாளர் ஹசீனா, உதவி பொறியாளர் ஜெயப்ரியா, கவுன்சிலர்கள் உமா மகேஸ்வரன், கார்த்திகா, நாகூர் மீரான், ரெஜினா, சீதாலெட்சுமி, குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் மங்கலநாயகி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.