ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் தூய்மை பணிகளுக்கு புதிய பேட்டரி வாகனங்கள்
- பேரூராட்சி பகுதியில் குப்பைகளை எடுத்து செல்ல 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
- தொடக்க விழா செயல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி பேரூராட்சியில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம்களை அவ்வப்போது நடத்தி குப்பை இல்லா பேரூராட்சியை உருவாக்கு வதற்காக, 'என் குப்பை என் பொறுப்பு' என்ற அடிப்படையில் பொது மக்களிடம் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு குப்பைகளை வண்டிகள் மூலம் அள்ளப்பட்டு வருகின்றது.
மேலும் பேரூராட்சி பகுதியில் ஆங்காங்கே குப்பைகள் தேங்காதவாறு அவற்றை எடுத்து செல்ல தற்போது புதிதாக 5 பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளது.
இதன் தொடக்க விழா பேரூராட்சி வளாகத்தில் தலைவர் சாரதா பொன் இசக்கி தலைமையில், செயல் அலுவலர் ராஜேஸ்வரி முன்னிலையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் புதிய பேட்டரி வாகனங்களை பேரூராட்சி தலைவர் சாரதா பொன் இசக்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரூராட்சி துணைத் தலைவர் சுந்தர்ராஜன், வார்டு உறுப்பினர்கள் மணி முருகன், திருப்பதி, பாரதிதாசன், வேதவல்லி, ராஜலட்சுமி, அகமது காதர் இப்ராஹிம், மந்திரமூர்த்தி, பொன் செல்வி, மணியம்மாள், சந்திரமதி அலுவலகப் பணியாளர் சுப்பிரமணியன், ரஞ்சித் மற்றும் பரப்புரையாளர்கள், சுகாதாரப் பணியாளர்கள், டெங்கு மஸ்து பணி யாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.