உள்ளூர் செய்திகள்

மீன்வளத்துறை ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிகளுக்கு கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார். அருகில் அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.

தூத்துக்குடியில் மீன்வளத்துறை அலுவலக புதிய கட்டிடம் - கனிமொழி எம்.பி. அடிக்கல் நாட்டினார்

Published On 2023-05-08 09:10 GMT   |   Update On 2023-05-08 09:10 GMT
  • நிகழ்ச்சிக்கு ன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
  • விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையில் மண்டல இணை இயக்குநர் உதவி இயக்குநர் மற்றும் மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளர் அலுவலகங்கள் பயிற்சி மையத்துடன் கூடிய ஒருங்கிணைந்த அலுவலக கட்டிடம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

ரூ. 5 கோடி மதிப்பில் புதிய கட்டிடம்

மீன்வளம், மீனவர்நலம் மற்றும் கால்நடை பாராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் முன்னிலை வகித்தார். மீன்வளத்துறை நெல்லை கோட்ட உதவி பொறியாளர் தயாநிதி வரவேற்று பேசினார்.

விழாவில் கனிமொழி எம்.பி. கலந்து கொண்டு ரூ. 5 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள புதிய கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

கலந்து கொண்டவர்கள்

இதில் கலெக்டர் செந்தில்ராஜ், மேயர் ஜெகன் பெரியசாமி, துணை மேயர் ஜெனிட்டா, மண்டல தலைவர்கள் கலைச்செல்வி, நிர்மல்ராஜ், தி.மு.க. மாநில வர்த்தக அணி இணைச்செயலாளர் உமரிசங்கர், இளைஞர் அணி அமைப்பாளர் ராமஜெயம், ஆவின் சேர்மன் சுரேஷ்குமார், மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், வக்கீல் அணி அமைப்பாளர் மோகன்தாஸ், மீனவரணி துணை அமைப்பாளர் ஜேசையா, தி.மு.க. வட்ட செயலாளர் ரவிசந்திரன், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தூத்துக்குடி மண்டல இணை இயக்குநர் அமலசேவியர், மீன்பிடித்துறைமுக திட்ட கோட்ட செயற்பொறியாளார் சரவணக்குமார், உதவி செயற்பொறியாளர் ரவி, மீன்துறை ஆய்வாளர் பெல்சி ஷிபானி, மீன்பிடித்துறைமுக மேலாண்மை மீன்துறை ஆய்வாளர்கள் ஆரோக்கி யசாமி, பொன் சரவணக்கண்ணன், தாசில்தார் பிரபாகர், கவுன்சிலர்கள் ஜெயசீலி, பவானி மார்ஷல், எடின்டா, சுப்புலட்சுமி, சரண்யா, வைதேகி, இசக்கிராஜா, மாநகர தி.மு.க. அணி நிர்வாகிகள் கிறிஸ்டோபர் விஜயராஜ், பால்ராஜ் மற்றும் ரேவதி, பெல்லா, அருணாதேவி, கவிதாதேவி, மணி, அல்பட், மகேஷ்வரசிங், பிரபாகர், ஜோஸ்பர், லிங்கராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மீன்வளம் மற்றும் மீனவர்நலத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News