அரசு பள்ளியில் ரூ.20 லட்சம் மதிப்பில் புதிய வகுப்பறை கட்டிடங்கள்
- மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதி மேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நடைபெற்றது.
- இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மெலட்டூர்:
தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை ஒன்றியத்தில் மெலட்டூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நரியனூர் ஊராட்சி ஒன்றிய தொட்க்கப்பள்ளி மற்றும் இடையிறுப்பு ஊராட்சி மணப்படுகை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகியவற்றிற்கு மாநிலங்கள் அவை உறுப்பினர் சண்முகம் தொகுதிமேம்பாட்டு நிதியில் தலா 20 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய வகுப்பறை கட்டிடங்கள் திறப்புவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
அம்மாபேட்டை ஒன்றியக்குழுதலைவர் கே.வீ.கலைச்செல்வன், துணை தலைவர் தங்கமணிசுரேஷ்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கோவி.அய்யாராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட செயலாளரும், மாநிலங்கள் அவை உறுப்பினருமான எஸ்.கல்யாணசுந்தரம் எம்பி மற்றும்மாநிலங்கள் அவை உறுப்பினர் எம்.சண்முகம் எம்பி ஆகியோர் கலந்து கொண்டு புதிய வகுப்பறை கட்டிடங்களை திறந்து வைத்தனர். இதில் அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, மாவட்ட கவுன்சிலர் ராதிகா, ஒன்றியக்குழு உறுப்பினர் குமார், மெலட்டூர் பேரூராட்சி தலைவர் இலக்கியாபட்டாபிராமன், இடையிருப்பு ஊராட்சி மன்ற தலைவர் வனிதாகார்த்திகேயன், பேரூராட்சி துணைதலைவர் பொன்னழகு சீனு. வார்டு உறுப்பினர் புனிதா, பள்ளி தலைமை ஆசிரியர் கிறிஸ்டோபேபி மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிராமமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.