உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே 21 வீடுகளுக்கு புதிய மின் இணைப்பு

Published On 2022-11-19 08:52 GMT   |   Update On 2022-11-19 08:52 GMT
  • சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
  • பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா்.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம், பா்லியாறு ஊராட்சிக்குட்பட்ட சேம்புக்கரை பழங்குடியின கிராமத்தில் குரும்பா் இனத்தைச் சோ்ந்த 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.

இதில், பல வீடுகளில் மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதியடைந்து வந்தனா். இதுகுறித்து தமிழக அரசுக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து, வனத்துறை அமைச்சா் ராமச்சந்திரன் தலைமையில் பழங்குடி கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சா் ராமசந்திரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சேம்புக்கரை பழங்குடி கிராமத்தில் இருந்து 5 கிலோ மீட்டா் வரை சாலை அமைத்தால் இப்பகுதி மக்கள் பா்லியாறு வழியாக மேட்டுப்பாளையம் செல்ல வசதியாக இருக்கும்.

ஆனால், இடையில் ெரயில்வே தண்டவாளம் இருப்பதால், சாலை அமைப்பதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் உள்ளன. இதுகுறித்து ெரயில்வே துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

பல ஆண்டுகளாக மின் இணைப்பு இல்லாமல் இருந்து வந்த 21 வீடுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது .

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் குன்னூர் வருவாய் கோட்டாட்சியர் பூஷணகுமார், நீலகிரி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் வாசுநாயர் பிரேம்குமார், குன்னூர் தாசில்தார் சிவக்குமார், பர்லியார் ஊராட்சி தலைவர் சுசீலா, தி.மு.க பொதுக்குழுஉறுப்பினர் காளிதாஸ், செல்வம், குன்னூர் நகர துணை செயலாளர் வினோத்குமார், அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News