புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியது: கடலூர் மாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை
- தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது.
- மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
கடலூர்:
கடலூர் மாவட்ட மீன்வள த்துறை உதவி இயக்குனர் சுப்பிரமணியன் வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது -
வங்க கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது . மேலும் காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். இதனால் தமிழக வங்க கடல் பகுதியில் மோசமான வானிலை நிலவ உள்ளது. கடல் காற்றானது 45 முதல் 65 கி.மீ வேகத்தில் வீசும் என வானிலை எச்சரிக்கை பெறப்பட்டுள்ளது. ஆகவே கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து வகையான மீன்பிடி படகுகளும் நாளை (18-ந் ) தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்க செல்ல கூடாது அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் ஏற்கனவே கடலில் உள்ள தங்கு கடல் படகுகள் அருகாமையில் உள்ள துறைமுகங்களுக்கு பாதுகாப்பாக கரைதிரும்ப அறிவுறுத்தப்படுகிறார்கள். மேலும் 19, 20 ஆகிய நாட்களில் கடலோர மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மீனவர்கள் தங்களது படகு, மீன்பிடி வலை மற்றும் இயந்திரம் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை மேடான பகுதிக்கு எடுத்து சென்று பாதுகாப்பாக வைக்க வேண்டும்.மீனவர்கள் இந்த அறிவிப்பை தவறாது பின்பற்றி அரசுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.