உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் கூட்டத்தில் காமராஜ் எம்.எல்.ஏ. பேசினார்.

அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-06-20 09:52 GMT   |   Update On 2023-06-20 09:52 GMT
  • உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டுள்ளார்.
  • அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டியில் அ.தி.மு.க. புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான இரா.காமராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசியதாவது :-

தி.மு.க ஆட்சிக்கு வரும் போது பிரச்சினையும் கூடவே வரும். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படை யிலே அமலாக்க துறையினால் செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டு ள்ளார்.

ஆதாரம் இருந்தால் யாரை வேண்டுமானாலும் அமலாக்கத்துறை கைது செய்யலாம். சீல் வைக்கலாம் என்ற அதிகாரத்தை ப.சிதம்பரம் உள்துறை அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்தார்.

உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் இரண்டு மாதத்திற்குள் விசாரணை செய்து முடிக்க வேண்டும். முகாந்திரம் இருக்கிறது என உச்சநீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்க ளுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை நிறைவேற்றுகிறோம் என முதலமைச்சர் தேர்தல் வாக்குறுதி கொடுத்தார்.

ஆனால் இதுவரை எந்த வாக்குறுதியையும் தி.மு.க. அரசு நிறைவேற்றவில்லை.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலை ந்துள்ளதை கண்டித்தும், செந்தில்பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தியும் நாளை (புதன்கிழமை), திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இதில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் டி. சி. சமூக சுந்தர், ஒன்றிய செயலாளர் சிங்காரவேல், முத்துப்பேட்டை ஒன்றிய செயலாளர் நடராஜன், முத்துப்பேட்டை நகர செயலாளர் அன்பழகன், மற்றும் பொறுப்பாளர்கள், கிளை பொறுப்பாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்

Tags:    

Similar News