உள்ளூர் செய்திகள் (District)

கோவை மாநகரில் காளப்பட்டி, இருகூரை மையப்படுத்தி புதிய காவல் நிலையங்கள்

Published On 2023-03-22 09:35 GMT   |   Update On 2023-03-22 09:35 GMT
  • 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன.
  • ஒவ்வொரு காவல் நிலையத்திலும் 80 காவலர்கள் பணியில் இருப்பார்கள்

கோவை,

கோவை மாநகரில் தற்போது தலா 15 சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற பிரிவு காவல் நிலையங்கள் உள்ளன. கண்காணிப்பு பணியை தொய்வின்றி மேற்கொள்ளவும், குற்றவாளிகளை விரைந்து கைது செய்யவும் கூடுதல் காவல் நிலையங்கள் ஏற்படுத்த வேண்டிய தேவை உள்ளது.

கடந்தாண்டு கரும்புக்கடை, சுந்தராபுரம், கவுண்டம்பாளையம் போலீஸ் நிலையங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் காளப்பட்டி, இருகூர் ஆகிய 2 இடங்களுக்கும் தனித்தனியாக போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்து மாறு மாநகர காவல்துறை நிர்வாகம் சார்பில் அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.தற்போது, பீளமேடு போலீசார் தான் விமானநிலையம், காளப்பட்டி வரை ரோந்து சென்று சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும், குற்ற வழக்கு களை விசாரிக்கவும் வேண்டியுள்ளது.

இதேபோல சிங்கா நல்லூர் காவல் துறையினர் இருகூர் வரை சென்று விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் அவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது.

இதையடுத்து சமீபத்தில் கோவைக்கு வந்த உள்துறை செயலாளரிடம் மேலும் 2 போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்துவதன் தேவை குறித்து காவல்துறை உயரதிகாரிகள் தெரி வித்தனர். இதுகுறித்து மாநகர காவல்துறை உயரதிகாரிகள் கூறும் போது, "கவுண்டம்பாளையம், சுந்த ராபுரம், கரும்புக்கடை ஆகிய 3 காவல் நிலையங்க ளுக்கும் கனரக காவல் நிலையத்துக்கான அனுமதி கோரியுள்ளோம்.இதனால் ஒவ்வொரு காவல் நிலை யத்திலும் 80 காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதுதவிர, இருகூர், காளப்பட்டி ஆகிய 2 காவல் நிலையங்களுக்கு அனுமதி கேட்டுள்ளோம். கோவை மாநகராட்சி எல்லையில் உள்ள வட வள்ளி, துடியலூர் ஆகிய காவல் நிலையங்கள் மாவட்ட காவல்துறை கட்டுப்ப ாட்டின் கீழ் உள்ளன. இதை மாற்றி மாநகர காவல்துறை கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. இதற்கான அனுமதி விரைவில் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் மருதமலை முருகன் கோயில் வரை கோவை மாநகர கட்டுப் பாட்டின் கீழ் கொண்டு வர திட்டமிட்டு உள்ளோம்," என்றனர்.

Tags:    

Similar News