குலசேகரன்பட்டினம், படுக்கப்பத்து பகுதியில் புதிய திட்டங்கள் -அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் நாளை தொடங்கி வைக்கிறார்
- குலசேகரன்பட்டினத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
- படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
உடன்குடி:
தமிழக மீன்வளம், மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உடன்குடி ஒன்றியம் குலசேகரன்பட்டி னத்தில் புதியதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள ஊராட்சி மன்ற கட்டிடத்தை நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு திறந்து வைக்கிறார்.
தொடர்ந்து காலை 11 மணிக்கு சாத்தான்குளம் ஒன்றியம் படுக்கப்பத்தில் புதியதாக அமைய உள்ள துணை மின் நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்.
பின்பு உடன்குடி ஒன்றியம் குதிரை மொழி ஊராட்சி சோலை குடியிருப்பில் காலை 11.30 மணிக்கு புதிய மேல்நிலை நீர் தேக்ககுடிநீர் தொட்டியை திறந்து வைக்கிறார்.
நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மற்றும் மாவட்ட வட்டார அரசு அதிகாரிகள் தி.மு.க. கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்கின்றனர்.
உடன்குடி ஒன்றிய பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் உடன்குடி மேற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளரும் உடன்குடி யூனியன் சேர்மனுமான பாலசிங், துணை சேர்மன் மீரா சீராசுதீன், உடன்குடி கிழக்கு ஒன்றிய செயலாளர் இளங்கோ, ஊராட்சி மன்ற தலைவர், துணைத் தலைவர், வார்டு உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர்.