உள்ளூர் செய்திகள்

திறமை தேடல் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு கலெக்டர் தீபக் ஜேக்கப் சான்றிதழ் வழங்கினார்.

பாதுகாப்பற்ற உணவை கண்டறிய புதிய தொழில்நுட்பம் தேவை- கலெக்டர் பேச்சு

Published On 2023-06-10 10:18 GMT   |   Update On 2023-06-10 10:18 GMT
  • அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும்.
  • பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும்

தஞ்சாவூர்:

தேசிய உணவு தொழில்நு ட்பம், தொழில் மேம்பாடு மற்றும் மேலாண்மை நிறுவனம் (நிப்டெம்) தஞ்சாவூர், இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் இயங்கி வரும் ஒரு முன்னோடி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும்.

"உணவுத் தரநிலைகள் உயிர்களைக் காக்கும்" என்ற கருப்பொருளின் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில், உலக உணவுப் பாதுகாப்பு நாள் அதன் வளாகத்தில் நடத்தப்பட்டது.

தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் தலைமை விருந்தினராக பங்கேற்றார்.

தஞ்சாவூர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சித்ரா முன்னிலையில் மாணவர்க ளின் திறமைத் தேடல் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசும்போது :-

ஒழுங்குமுறை அமைப்பு கள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் போன்ற நிறுவனங்கள் பொது சுகாதாரத்தில் உள்ள சவால்களுக்கான தீர்வுகளை கண்டறிய வேண்டும். பாதுகாப்பற்ற உணவில் இருந்து மக்களைக் காக்க புதுமையான தொழில்நுட்பங்களைக் மாணவர்கள் கண்டறிய வேண்டும். அதிநவீன தொழில்நுட்பத்தை உள்வாங்கி, நல்ல உணவின் மூலம் உலகை பாதுகாக்க வேண்டும் என்றார்.

இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் லோகநாதன், நிறுவனத்தின் அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் புவனா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News