உள்ளூர் செய்திகள்

சிவகிரி பேரூராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கிய போது எடுத்த படம்.

சிவகிரி பேரூராட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணி

Published On 2023-05-13 08:52 GMT   |   Update On 2023-05-13 08:52 GMT
  • சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல் பணி நடைபெற்றது.
  • நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

சிவகிரி:

தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன் உத்தரவின் பேரில், பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் அறிவுரையின் படி, சிவகிரி பேரூராட்சி சார்பில் ஒட்டு மொத்த தூய்மை பணியை முன்னிட்டு வாறுகால்கள் சுத்தம் செய்தல், மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் தரம் பிரித்தல், சுவர்களில் போஸ்டர்களை கிழிக்கும் பணிகள், டெங்கு காய்ச்சலை தடுக்கும் வகையில் நிலவேம்பு கசாயம் வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற தலைவர் கோமதிசங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், செயல் அலுவலர் நவநீதகிருஷ்ணன், வார்டு கவுன்சிலர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் குமார், இசக்கி, தினேஷ் குமார் ஆகியோர் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினர். இதில் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் அலுவலகர்கள், பணியாளர்கள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News