நெல்லை மாநகராட்சி சுகாதாரத் துறை சார்பில் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம்- மேயர் சரவணன் வழங்கினார்
- கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு மேயர் சரவணன் நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
- டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது.
நெல்லை:
வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு நெல்லை மாநகர பகுதியில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் மாநகராட்சி சார்பில் பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
நிலவேம்பு கசாயம்
அதன் ஒரு பகுதியாக மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடை பெற்றது.
டவுன் நெல்லையப்பர் கோவில் முன்பு நடந்த நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சியில் மேயர் சரவணன் கலந்து கொண்டு கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் கடைக ளுக்கு வரும் வாடிக்கை யாளர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் டாக்டர் சரோஜா, நெல்லை மண்டல சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் அந்தோணி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து டவுன் ரத வீதிகள் முழுவதிலும் பொது மக்களுக்கு நில வேம்பு கசாயம் வழங்கப் பட்டது. தொடர்ந்து மாநகரப் பகுதி முழுவதும் டெங்கு உள்ளிட்ட காய்ச்சல் பாதிப்புகள் ஏற்படாத வண்ணம் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கையாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் நில வேம்பு கசாயம் வழங்குவ தற்கு ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது.