கேரளாவில் நிபா வைரஸ் பரவல் எதிரொலி: நீலகிரி சுகாதார அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு
- கூடலூர் சோதனைச்சாவடிகளில் மருத்துவ பரிசோதனை
- வாகனங்களில் வருவோரிடம் தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை
ஊட்டி,
கேரளத்தில் நிபா வைரசுக்கு 2 பேர் பலியாகி விட்டனர். அங்கு மேலும் 2 பேர் நோய்த்தொற்றுடன் உள்ளனர். அவர்களுக்கு கோழிக்கோடு ஆஸ்பத்தி ரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் மற்ற மாவட்ட ங்களை சேர்ந்தவர்கள் கோழிக்கோடு பகுதிக்கு வர தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டு உள்ளது.
கேரள மாநிலத்தில் இருந்து தினமும் 1000-க்கும் மேற்பட்டோர் வாக னங்கள் மூலம் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர். எனவே கேரளாவின் அண்டை மாவட்டமாக உள்ள நீலகிரியில் மருத்துவ அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதிலும் குறிப்பாக கூடலூரில் உள்ள நாடுகாணி, சோலாடி, தாளூா், நம்பியாா்குன்னு, பாட்டவயல் ஆகிய சோதனைச் சாவடிகளில் சுகாதார அதிகாரிகள் தற்காலிக மருத்துவ முகாம்களை அமைத்து மருத்துவ பரிசோதனை செய்து பார்க்கும் பணிகளை செய்து வருகின்றனர். அங்கு 24 மணி நேரமும் சுகாதார ஊழியர்கள் பணியில் இருக்க வேண்டும் என அறிவு றுத்தப்பட்டு உள்ளது.கேரளாவில் இருந்து புறப்பட்டு வரும் வாகனங்கள் அனைத்தும் சோதனைக்குப் பிறகே தமிழகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக வாகனங்களில் பயணிக்கும் பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளதா என்பது தொடர்பாக தொ்மல் ஸ்கேனா் மூலம் உடல் வெப்பநிலை பரிசோதனை செய்து வருகின்றனர். அப்படி வருவோருக்கு காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.