என்.எல்.சி. விவகாரம் அமைச்சர் குறித்து அவதூறாக பேசிய பெண் மீது புகார்
- மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
- விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கடலூர்:
என்.எல்.சி. 2-வது சுரங்க விரிவாக்கத்திற்காக வாய்க்கால் வெட்டும் பணி கடந்த 2 நாட்களாக நடைபெற்று வருகிறது. அறுவடைக்கு தயாராக உள்ள நெற்பயிர்களை அழித்து இப்பணி நடைபெறுவதை கண்டித்தும், நிலம் கொடுத்தவர் வீட்டில் ஒருவருக்கு என்.எல்.சி.யில் வேலை வழங்க கோரியும், இழப்பீட்டுத் தொகையை உயர்த்தி வழங்க கோரியும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக சேத்தியா த்தோப்பு அருகேயுள்ள மேல்வ ளையமாதேவி கிராமத்தைச் சேர்ந்த சாந்தி (வயது 55) என்பவர் பேட்டியளித்தார். இதில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தொடர்பாக அவதூறாகவும், ஆபாசமா கவும் பேசினார். இது தொலைக்கா ட்சிகள் மட்டுமின்றி, சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியது.
இதனையடுத்து அதே கிராமத்தை சேர்ந்த தி.மு.க. விவசாய அணி நிர்வாகி ரா மகிருஷ்ணன், சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். மேலும், தி.மு.க. தொழில்நுட்ப அணி நிர்வாகிகள் அருளரசி, மலர்விழி, சுதாசம்பத் ஆகியோர் சேத்தியாத்தோப்பு போலீசாரிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
இம்மனுக்களில், அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் குறித்து அவதூறாகவும், ஆபாச மாகவும் பேசிய சாந்தி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்யவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.