உள்ளூர் செய்திகள்

வட மாநில தொழிலாளர்கள் புகார் தெரிவிக்க புகார் எண்கள் அறிவிப்பு

Published On 2023-03-05 09:29 GMT   |   Update On 2023-03-05 09:29 GMT
  • கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது.
  • வட மாநிலத்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

நீலாம்பூர்,

தமிழகத்தில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் வீடியோக்கள் பரவின.

அந்த வீடியோக்கள் போலி என அரசு தெரிவித்துள்ளது. இதுபோன்ற தகவல்களை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 தினங்களாக வட மாநில தொழிலாளர்கள் அதிகளவில் சொந்த ஊருக்கு செல்வதை காண முடிகிறது. வட மாநிலத்த வர்களுக்கு பாது காப்பில்லை என்ற கோணத்தில் அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்வதாக தகவல்களும் வெளி யாகியது.

இதை யடுத்து கோவை போலீசார் வட மாநில த்தவர்களுக்கு அச்சத்தை போக்கும் விதமாக அவர்களுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக புறநகர் பகுதியான கருமத்த ம்பட்டி உட்கோட்ட காவல்துறை சார்பில் டி.எஸ்.பி. ஆனந்த் ஆரோக்கி யராஜ் மற்றும் சூலூர் இன்ஸ்பெக்டர் மாதையன் ஆகியோர் அரசூரில் உள்ள மில் ஒன்றில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

அப்போது வட மாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டாலோ, அச்சப்படும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்தாலோ உடனடியாக காவல்துறையினரை அணுக வேண்டும். அதற்கான பிரத்தியேக எண்களும் அறிவிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்படும். 24 மணி நேரமும் நீங்கள் போலீசாரை தொடர்பு கொள்ளலாம். அதற்கு ஏற்ற வகையில் போலீசார் பணியாற்றி வருகின்றனர்.

தொடர்ந்து வட மாநில தொழிலாளர்கள் தங்கி இருக்கும் பகுதிகள், வேலை செய்யும் தொழிற்சாலைகளில் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News