உள்ளூர் செய்திகள்

பழைய இரும்பு கடையில் திருடிய பிரபல கொள்ளையன் கைது

Published On 2022-11-20 08:56 GMT   |   Update On 2022-11-20 08:56 GMT
  • கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை திருடிய பிரபல கொள்ளையன் போலீசார் கைது செய்தனர்.
  • ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

அன்னதானப்பட்டி:

சேலம் கன்னங்குறிச்சி சின்ன திருப்பதி பகுதி சேர்ந்தவர் பழனிவேல் (வயது 57). இவர் கிச்சிப்பாளையம் அடுத்த எருமாபாளையம் பைபாஸ் சாலையில் பழைய இரும்பு, பித்தளை மற்றும் செம்பு பொருட்களை வாங்கி விற்கும் கடை வைத்து நடத்தி வருகிறார்.

இவர் கடந்த வியாழக்கிழமை இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர் மறுநாள் வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த பழைய பித்தளை பொருட்கள், காப்பர் பொருட்கள், மற்றும் ஒயர்கள் செல்ப் மோட்டார்கள், போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து பழனிவேல் கிச்சிபாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடிய மர்ம நபர்களை தேடி வந்தனர்.

இதனிடையே பொருட்களை திருடியது சேலம் தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சங்கர் (32) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் வழிப்பறி, திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசார் நேற்று சங்கரை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News