உள்ளூர் செய்திகள்

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

Published On 2022-07-02 06:47 GMT   |   Update On 2022-07-02 06:47 GMT
  • தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
  • இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர்.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே வடரங்கம் கிராமத்தில் தமிழக அரசின் வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். சுகாதார அலுவலர் கருணாகரன் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் சின்னதுரை, அரசு மருத்துவர் கௌசிகா முன்னிலை வகித்தனர்.

இதில் பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு கர்ப்பிணிப் பெண்களுக்கு ரூ.2000 வீதம் மதிப்புள்ள உணவு பொருட்கள் அடங்கிய ஊட்டச்சத்து பெட்டகத்தை வழங்கி பேசுகையில், தமிழக அரசால் இல்லம் தேடி மருத்துவம் கொண்டுவரப்பட்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதன்படி வீட்டில் யாராவது நோயினால் பாதிக்கப்பட்டால் உறவினர்கள் வர மறுத்தாலும் அரசு ஆம்புலன்ஸ் நேரடியாக வீட்டிற்கு சென்று பாதிக்கப்பட்டவருக்கு தேவையான முழு மருத்துவ உதவியும் செய்து அதற்கான முழு மருத்துவ செலவையும் அரசே ஏற்றுக்கொள்கிறது என்றார்.

இந்த மருத்துவ முகாமில் 1065 பேர் கலந்துகொண்டு பயனடைந்தனர். வட்டார அளவில் அங்கன்வாடிகள் சார்பில் இயற்கை உணவு மற்றும் இயற்கை வகையான ஊட்டச்சத்து கண்காட்சி முகாமில் இடம் பெற்றிருந்தது.

முடிவில் சுகாதார ஆய்வாளர் சதீஷ்குமார் நன்றி கூறினார்.

Tags:    

Similar News