பாவூர்சத்திரத்தில் சத்துணவு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
- ஆர்ப்பாட்டத்தில் சத்துணவு ஊழியர்கள் ரத்தத்தை கொண்டு ரத்த கையெழுத்து இட்டனர்.
தென்காசி:
பாவூர்சத்திரத்தில் உள்ள கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பு தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் கீழப்பாவூர் ஒன்றிய தலைவர் சங்கரேஸ்வரி தலைமையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது தங்களின் அடிப்படை கோரிக்கைகளான 10 வருடம் பணி முடித்த சத்துணவு ஊழியர்களை அனைத்துதுறை காலி பணியிடங்க ளிலும் நிரப்பி வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என கோஷம் எழுப்பினர். நிகழ்ச்சியில் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்று பேசினார். தென்காசி மாவட்ட பொருளாளர் சிவசுப்பிரமணியன் விளக்க உரையாற்றினார். இதில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தின் தென்காசி மாவட்ட செயலாளர் கங்காதரன் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சத்துணவு ஊழியர்கள் ஊசியை கொண்டு தங்களின் விரல்க ளில் குத்தி ரத்தத்தை கொண்டு ரத்த கையெழுத்து இட்டனர். முடிவில் ஒன்றிய துணைத் தலைவர் சக்திமாரி நன்றி கூறினார்.