உள்ளூர் செய்திகள்
வயிற்று வலியால் ஒடிசா மாநில வாலிபர் தற்கொலை
- பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
- சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி,
ஒடிசா மாநிலம், கோராபுட் மாவட்டம், கக்குடா கிராமத்தை சேர்ந்தவர் இந்திரா ஜானி (வயது17). இவர் பெங்களூர், ஆனேக்கல் பகுதியில் தங்கி வேலை பார்த்து வந்தார்.
இவர் நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார்.இதற்கு பல்வேறு மருத்துவ மனைகளில் சிகிச்சை பார்த்து வந்தும் குணமாகவில்லை.
சம்பவத்தன்று மனவேதனையில் இருந்த இந்திரா ஜானி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு செய்து கொண்டார்.
இது குறித்து பேரிகை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.