உள்ளூர் செய்திகள்
திருத்தணி அருகே சமத்துவபுரத்தில் அதிகாரிகள் ஆய்வு
- ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
- சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார்.
திருத்தணி:
திருத்தணி அருகே உள்ள ராமசமுத்திரம் ஊராட்சியில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பெரியார் சமத்துவபுரம் திறக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் சமத்துவ புரத்தை திறப்பதற்கான பணிக்காக ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்து சாலைவசதி, குடிநீர்குழாய், தெரு விளக்கு, கழிவு நீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை தேவைக்கான பணிகள் செய்து முடிக்கப்பட்டு உள்ளது. இதனை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே சமத்துவபுரத்தை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் அமுதா, நேரில் பார்வையிட்டு அங்குள்ள வீடுகளை ஆய்வு செய்தார். அப்போது திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், கூடுதல் இயக்குனர்கள் மற்றும் வருவாய்த்துறை ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.