பூம்புகார் தீயணைப்பு நிலையத்தில் அதிகாரி ஆய்வு
- பேரிடர் கால மீட்பு உபகரணங்களின் நிலை குறித்து நேரில் ஆய்வு.
- கூடுதல் உபகரணங்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
சீர்காழி:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கிய தீவிரமடைந்துள்ள நிலையில் கடலோரப் பகுதிகளில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையங்களில் பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் தயார் நிலையில் உள்ளது குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு உத்தரவிட்டதன் பேரில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை தலைவர் பி.கே.ரவி கடலோரப் பகுதிகளில் உள்ள தீயணைப்பு நிலையங்களில் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்
இதன் ஒரு பகுதியாக மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த பூம்புகாரில் அமைந்துள்ள தீயணைப்பு நிலையத்துக்கு வருகை தந்த அவர் தீயணைப்பு நிலையத்தில் உள்ள பேரிடர் கால மீட்பு உபகரணங்கள் நிலை குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார் மேலும் பேரிடர் காலங்களில் உதவுவதற்காக தேவையான உபகரணங்கள் குறித்தும் கேட்டறிந்த அவர் தேவையான கூடுதல் உபகரணங்களும் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆய்வின்போது மயிலாடுதுறை எஸ்.பி. நிஷா மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.