வளர்ச்சி திட்ட பணிகளை அதிகாரி ஆய்வு
- நடைபெற்று கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டார்.
- நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையத்தை ஆய்வு செய்தார்.
பாபநாசம்:
தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ஒன்றியத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை தமிழ்நாடு மத்திய தணிக்கை துறை தலைமை கணக்காயர் நெடுஞ்செழியன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போத பாபநாசம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 2021, 22,23 ஆகிய 3 ஆண்டுகளில் இதுவரை நடைபெற்று முடிந்த வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற பணிகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் ராஜகிரி ஊராட்சியில் நுண்ணுயிர் உரம் தயாரித்தல் மையம், கிராம சேவை மைய கட்டிடம், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி கட்டிட பணிகள் ஆகியவற்றை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் மரக்கன்று நட்டு வைத்தார்.
ஆய்வின் போது உடன் முதுநிலை தணிக்கையாளர் முரளி, மேற்பார்வையாளர் மனோகர், பாபநாசம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சிவகுமார், கிராம ஊராட்சிகள் வட்டார வளர்ச்சி அலுவலர் சுதா, ஒன்றிய பொறியாளர்கள் சாமிநாதன் ,சரவணன், ராஜகிரி ஊராட்சி மன்ற சமீமா பர்வீன்ஆகியோர் உடன் இருந்தனர்.