உள்ளூர் செய்திகள்

அங்காளம்மன் கோவிலில் அதிகாரிகள் ஆய்வு

Published On 2023-05-24 09:14 GMT   |   Update On 2023-05-24 09:14 GMT
  • தற்போது கட்டுமானம் தயாரிக்கும் பொருட்டு நாங்கள் கோவிலில் அளவுகளை சரி பார்த்துள்ளோம்.
  • மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் கோவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.

காவேரிப்பட்டினம்,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பழமையான கோவில்களில் காவேரிப்பட்டணம் அங்காளம்மன் கோவில் ஒன்றாகும். இக்கோவில் கட்டி சுமார் 110 வருடங்கள் ஆகும்.

இக்கோவில் தமிழக அரசு சார்பில் அறநிலையத்துறை எடுத்து சுமார் 40 வருடங்கள் ஆகும் . இந்நிலையில் இக்கோவிலில் பலமுறை பக்தர்கள் பொதுமக்கள் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என கூறி வந்தனர். இந்நிலையில் இக்கோவில் வரைபடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. கட்டுமான மதிப்பீடு தயாரிக்கும் பொருட்டு உதவி பொறியாளர்கள் பாலகிருஷ்ணன் , முத்துசாமி தலைமையில் கோவில் பணியாளர்கள் பிரபு ஜெகதீசன் ஆகியோர் கோவிலின் அளவுகளை சரி பார்த்தனர் . இது குறித்து அவர்கள் கூறும் பொழுது அங்காளம்மன் கோவில் வரைபடம் அங்கீகாரம் பெற்றுள்ளது. தற்போது கட்டுமானம் தயாரிக்கும் பொருட்டு நாங்கள் கோவிலில் அளவுகளை சரி பார்த்துள்ளோம். உடனடியாக மேல் அதிகாரிகளுக்கு அனுப்பி விரைவில் கோவில் புனரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். அப்போது உடன் சௌந்தர்ராஜன், காமராஜ், செந்தில் மற்றும் மனுதாரர்கள் சுகுமார், பார்த்திபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News