கீரனூர் பகுதியில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க அதிகாரிகள் திடீர் சோதனை
- கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.
- கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறையினர் கீரம்பூர் அருகே ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவற்றை கடத்தப்படுகிறதா என வாகன சோதனை மேற்கொண்டனர்.
கீரம்பூர், டோல்கேட் அருகே குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையில் லாரி மற்றும் கனரக வாக–னங்களை ஆய்வு செய்தனர்.
தமிழக அரசு சார்பில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்–படும் ரேசன் அரிசி மற்றும் மண் எண்ணை ஆகியவை கடத்தப்படுகிறதா என்ற சந்தேகத்தின் அடிப்ப–டையில் அவ்வழியாக வந்த லாரி, சரக்கு ஆட்டோ மற்றும் கனரக வாகனங்–களை நிறுத்தி ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வில் ரேஷன் அரிசி மற்றும் மண் எண்ணை எதுவும் பிடிபட–வில்லை எனவும் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மாவட்ட குடிமைப் பொருள் குற்ற புலனாய்வு துறையினர் தெரிவித்தனர்.
வழியாக வந்தால் அனைத்து வாகனங்க–ளையும் நிறுத்தி சோதனை செய்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.