பெருங்கரை மயான பிரச்சனைக்கு நில அளவை செய்து அதிகாரிகள் தீர்த்தனர்
- பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறினார்.
- நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.
மெலட்டூர், அக்.13-
தஞ்சை மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, வடக்குமாங்குடி ஊராட்சியில் பெருங்கரை கிராம மக்கள் பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த பொதுமயான பாதையை அதே ஊரை சேர்ந்த பத்மநாபன் என்பவர் மயான பாதை தனது பட்டா நிலத்தில் உள்ளதாக கூறி மயான பாதையை அரசு மூலம் புதுப்பிக்க தொடர்ந்து ஆட்சேபனை தெரிவித்ததை அடுத்து பெருங்கரை கிராமமக்கள் தஞ்சை மாவட்ட கலெக்டர் மற்றும் பாபநாசம் தாசில்தாரிடம் மயானபாதையை சர்வே செய்து தரும்படி மனு கொடுத்தனர்.
இதனை தொடர்ந்து அம்மாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கூத்தரசன், அமானுல்லா, ஒன்றிய உதவிபொறியாளர் கார்த்திகேயன், வடக்கு–மாங்குடி ஊராட்சி மன்ற தலைவர் கலைச் செல்விகனகராஜ் மற்றும் கிராமமக்கள் முன்னிலையில் பாபநாசம் குறு வட்ட நில அளவையர் செல்வக்குமார், அய்யம்பேட்டை வருவாய் ஆய்வாளர் பாலசுப்ரமணியன், கிராமநிர்வாக அதிகாரி லதா உள்பட வருவாய் துறையினர் மயான பாதைக்குரிய பகுதியை நில அளவை செய்து கல் நட்டனர்.
நீண்ட நாட்களாக கிராமக்களுக்கு இருந்து வந்த மயானபாதை பிரச்சனை முடிவுக்கு வந்ததால் கிராமமக்கள் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனர்.