உள்ளூர் செய்திகள்

மூதாட்டி தங்கம்மாள்.

திரும்ப பெறப்பட்ட சாத்தான்குளம் மூதாட்டியின் முதியோர் உதவித்தொகை

Published On 2023-11-24 08:52 GMT   |   Update On 2023-11-24 08:52 GMT
  • கடந்த 2020-ம் ஆண்டு இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் மூதாட்டி தங்கம்மாள் முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது.
  • இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது.

சாத்தான்குளம்:

சாத்தான்குளம் காமராஜ்நகரை சேர்த்தவர் கூலித் தொழிலாளி பேச்சிமூத்து மனைவி தங்கம்மாள் (வயது95). கடந்த 3 வருடங்களுக்கு முன்பு முதியோர் உதவி தொகை கேட்டு சாத்தான்குளம் சமூகப் பாதுகாப்பு தாசில்தாரிடம் தங்கம்மாள் மனு கொடுத்திருந்தார்.

அதன்பேரில் கடந்த 2020-ம் ஆண்டு இவரின் வங்கி கணக்கில் இட்டமொழி ரோட்டில் உள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஒன்றில் அவரது முதியோர் உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் வங்கி அதிகாரிகளோ மற்றும் சமூக பாதுகாப்பு திட்ட அதிகாரிகளோ தங்கமாளுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது குறித்து தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது.

இதற்கிடையே பல மாதங்களாக உதவித்தொகையை எடுக்காத தால் அந்த பணம் திரும்ப பெறப்பட்டுள்ளது. இது குறித்து மூதாட்டி தங்கம்மாள் கூறும்போது, எனக்கு முதியோர் தொகை வந்துள்ளதா என பல முறை வங்கியிலும், தாலுகா அலுவலகத்திலும் கேட்டு வந்தேன். ஆனால் அதற்கு வங்கி அதிகாரிகளும், வருவாய்த்துறைனரும் சரியான பதிலை கூறவில்லை.

இந்நிலையில் உறவினர் ஒருவர் மூலம் வங்கி கணக்கு புத்தகத்தை வங்கியில் உள்ள எந்திரத்தில் பதிவு செய்து பார்த்தபோது எனக்கு கடந்த ஏப்ரல் மாதம் வரை உதவித்தொகை வழங்கப்பட்டு அந்த பணத்தை எடுக்காததால், சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் மொத்தம் ரூ. 36 ஆயிரம் திரும்ப எடுத்து கொண்டது தெரியவந்தது. எனவே எனக்கு மீண்டும் முதியோர் உதவித் தொகை வழங்கக்கோரி மாவட்ட கலெக்டர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனுக்கள் அனுப்பி உள்ளேன். அதற்கு அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 

Tags:    

Similar News