உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் வக்கீல் கனகராஜ் பேசியபோது எடுத்தபடம்.

நெல்லையில் 23-ந் தேதி புதிய தமிழகம் கட்சி சார்பில் வீரவணக்க பொதுக்கூட்டம் - தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து 500 வாகனங்களில் செல்ல முடிவு

Published On 2022-07-13 09:14 GMT   |   Update On 2022-07-13 09:14 GMT
  • புதிய தமிழகம் கட்சி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.
  • 500-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும் என்று கனகராஜ் பேசினார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடியில் கட்சியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் கனகராஜ் தலைமையில் நடந்தது.

மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் கதிரேசன், சுப்பிரமணியன், பாலசுந்தரராஜ், மாநில துணை அமைப்பு செய லாளர்கள் கிருபைராஜ், லிங்கராஜ், மாநில நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் கரு.ராஜசேகரன், மன்சூர்அலி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட துணை செயலாளர் மருதன்வாழ்வு ரவி வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் அய்யர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆலோசனை களை வழங்கி பேசினார். கூட்டத்தில், தூத்துக்குடி மாவட்ட புதிய தமிழகம் கட்சி செயலாளர் கனகராஜ் பேசியதாவது:-

வீரவணக்க நினைவஞ்சலி

வரும் 23-ந் தேதி நெல்லை கலெக்டர் அலுவலகம் அருகேயுள்ள தாமிரபரணி ஆற்றில் கூலி உயர்வுக்காக போராடி உயிர் நீத்த 17மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்களின் உயிர் தியாகத்திற்கு வீரவணக்க நினைவஞ்சலி செலுத்தப்படுகிறது.

வீரவணக்க நினைவஞ்சலி, வீரவணக்க பேரணி மற்றும் அதனைத்தொடர்ந்து அன்று மாலையில் தச்சநல்லூரில் புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில் வீரவணக்க பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

வீரவணக்க நினைவஞ்சலி மற்றும் வீரவணக்க பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து ஒரு ஒன்றியத்திற்கு 50வாகனம் என குறைந்தது 500க்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று நெல்லை கே.டி.சி நகரில் இருந்து அணி திரண்டு சென்று பங்கேற்றிட வேண்டும். இதற்கு மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், மாநில தொண்டரணி அமைப்புக் குழு அசோக்குமார், மாநில மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி, மாநில இளைஞரணி அமைப்பாளர் மாரிமுத்துகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர்கள் பெருமாள், அதிக்குமார்குடும்பர், ஒன்றிய செயலாளர்கள் தூத்துக்குடி செந்தூர் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஜேசிபி.முருகன்(மேற்கு), மனோகரன்(கிழக்கு), ஆழ்வை கேசவன், விளா த்திக்குளம் பெருமாள் (தெற்கு), உமையன்(கிழக்கு), கோவில்பட்டி சண்முகநாதன், கருங்குளம் சின்னத்துரை, கோவில்பட்டி நகர செயலாளர் மாடசாமி, தூத்துக்குடி மாநகர துணை செயலாளர் துரை, மாநகர இளைஞரணி செயலாளர் மாரியப்பன், மாநகர மீனவரணி செயலாளர் பாலமுருகன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர். தூத்துக்குடி மாநகர செயலாளர் ரமேஷ், நன்றி கூறினார்.

Tags:    

Similar News