மோட்டார் சைக்கிள் மீது மினி ஆட்டோ மோதி விவசாயி பலி
- மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
- பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, ஜேடர்பாளையம் அருகே
உள்ள வி.புதுப்பாளை யத்தை சேர்ந்தவர் சோம சுந்தரம் (வயது 45) விவசாயி. இவர் ஜேடர்பாளையம் பகுதியில் மீன் வாங்கிக் கொண்டு, தனது மோட்டார் சைக்கிளில் கபிலர்மலை செல்லும் சாலையில் சென்று கொண்டிருந்தார்.
ஜேடர்பாளையம் அருகே உள்ள சரளைமேடு பகுதி யில் சென்றபோது, கபிலர்மலையில் இருந்து ஜேடர்பாளையம் நோக்கி பால் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி ஆட்டோ, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் சோம சுந்தரத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரி ழந்தார். அதிவேகமாக வந்துவிபத்தை ஏற்படுத்திய மினி ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்ததில் பால் கேன்கள் சாலையில் விழுந்து, பால் அனைத்தும் சாலையில் ஆறாக ஓடி வீணானது. மேலும் கவிழ்ந்து கிடந்த ஆட்டோவி னுள் சிக்கி இருந்த ஓட்டுநர் குணசேகரனை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டனர். குணசேகரன் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து அப்பகு தியை சேர்ந்த பொதுமக்கள் ஜேடர்பாளையம் போலீ சாருக்கு விபத்து குறித்து தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் இறந்த சோமசுந்தரத்தின் உடலை மீட்டு பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் மது போதையில் மினி ஆட்டோவை ஒட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சோழசிராமணியைச் சேர்ந்த குணசேகரனை (30) போலீசார் கைது செய்து, மினி ஆட்டோவை பறிமுதல் செய்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து, போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.