உள்ளூர் செய்திகள்

மருத்துவர்கள் காவல்துறையினருக்கு கண் பரிசோதனை செய்த போது எடுத்த படம்.

அரூர் உட்கோட்ட காவல் துறை சார்பில் இலவச கண் பரிசோதனை முகாம்

Published On 2022-10-10 08:55 GMT   |   Update On 2022-10-10 08:55 GMT
  • காவலர் குடியிருப்பு வளாகத்தில் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
  • முகாமிற்கான ஏற்பாடுகளை அரூர் காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

அரூர்,

அரூர் உட்கோட்ட காவல் துறை மற்றும் அரூர் ஜோதி லேசர் கண் பரிசோதனை அறுவை சிகிச்சை மையம் இணைந்து காவல்துறை குடும்பங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரூர் காவலர் குடியிருப்பு வளாகத்தில் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு மது விலக்கு அமல் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் ராஜா சோமசுந்தரம் தலை மையில் காவல் ஆய்வாளர் பாஸ்கர் பாபு முன்னிலை வகித்தார்.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவசமாக செய்யப்பட்டது. மருத்துவர் ஷியாம் சுந்தர், மருத்துவர் வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை தொடங்கி வைத்தார்கள்.

இந்த முகாமில் கண் சம்பந்தப்பட்ட அனைத்து பரிசோதனைகளும் இலவச மாக செய்யப்பட்டது. மேலும் இதில் ஏராளமான காவல் துறையினர் மற்றும் அவரது குடும்பத்தினர் பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

இந்த இலவச முகாமிற்கான ஏற்பாடுகளை அரூர் காவல் துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

Tags:    

Similar News