ரோட்டரி சங்கம் சார்பில் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ளவர்களுக்கு புத்தாடை, இனிப்பு வழங்கல்
- நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.
- புதிய ஆடைகள் , இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் வழங்கினர்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கம் சார்பில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருத்துறைப்பூண்டி கீழ வீதியில் இயங்கி வரும் நம்பிக்கை மனநல காப்பகத்தில் தங்கி உள்ள மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு புதிய ஆடைகள், இனிப்பு மற்றும் பட்டாசுகள் டெல்டா ரோட்டரி சங்க உறுப்பினர்கள் அனைவரின் ஒத்துழைப்போடும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு தலைவர்ரமேஷ் தலைமை தாங்கினார்.
மண்டலம் 25 உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலை வகித்தார்.
டெல்டா ரோட்டரி சங்கத்தின் செயல்பாடுகளை வாழ்த்தி நம்பிக்கை மனநல காப்பக சேர்மன் சௌந்தர்ராஜன், அவரது துணைவியார் காப்பகத்தின் துணை சேர்மன் விஜயா ஆகியோர் வாழ்த்துரை வழங்கி டெல்டா ரோட்டரி உறுப்பினர்களை கௌரவித்தனர்.
முடிவில் செயலாளர் ராஜதுரை நன்றி கூறினார்.
இந்த தீபாவளி சிறப்பு புத்தாடை வழங்கும் ஏற்பாட்டினை பொருளாளர் அகிலன், உடனடி முன்னாள் தலைவர் காளிதாஸ் உள்ளிட்ட முன்னாள் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மனநல காப்பகத்தில் உள்ளவர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.